Thursday, April 12, 2018

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியாக விவகாரம் - குற்றவாளி கைது



சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியாக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேசம் உனாவைச் சேர்ந்த ஆசிரியர் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியிட்டதை ஒப்புக்கொண்டார். 




புதுடெல்லி:

மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளை வெளியிட்டதாக இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், கிளார்க் மற்றும் அவரின் உதவியாளரை போலீசார் கடந்த சனிக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் கையால் எழுதிய வினாத்தாளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 10-ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்டதை ஆசிரியர் ராகேஷ் குமார் ஒப்புக்கொண்டார். ராகேஷ் குமார் இமாச்சலப்பிரதேசம் மாநிலம் டிஏவி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

மேலும், இது தொடர்பாக ஒரு பெண் ஆசிரியரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். இது குறித்து பேசிய டெல்லி கிரைம் பிரிவு போலீஸ் அதிகாரி ராம் நாய்க், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாளை வெளியிட்ட விவகாரத்தின் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவு...