Sunday, April 15, 2018

பாரதியார் பல்கலை.யில் பிஹெச்.டி. படிப்பு: மே 7-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு








கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேர மாணவ}மாணவிகள் மே 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களிலும் எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் முழு நேர, பகுதி நேரமாகச் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியுள்ளது. மே 7-ஆம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே, மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.





No comments:

Post a Comment

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவு...