Sunday, April 15, 2018

மருத்துவ படிப்புகள் அறிவோம்

இந்தியாவில் மொத்தம் 7 வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன.... அவை 1. அலோபதி (MBBS, BDS), 
2. ஹோமியோபதி,
3. சித்தா (இது முற்றிலும் தமிழ் மருத்துவ முறை  ஆகும்), 
4. ஆயுர்வேதம் (இது முற்றிலும் இந்திய மருத்துவ முறை ஆகும்)
5. யுனானி டிப் (இது முற்றிலும் முகலாய மருத்துவ முறை ஆகும்),
6.நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ் (இது முற்றிலும் இந்திய முறை மருத்துவம் ஆகும்), 
7. சௌவா ரிக்பா (இது திபத்திய முறை மருத்துவம் ஆகும்).
1. அலோபதி மருத்துவ முறை:- இது உடலுக்குத் தேவையான சத்துக்களை வேதியியல் மூலம் மருந்துகளாக உருவாக்கி அந்த மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் நோயை குணமாக்கும் முறையாகும். இம்முறை மூலம் நோய்களை மிகவும் விரைவாக குணப்படுத்த முடியும்....
தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் கல்லூரிகளும், 8 டீம்டு யூனிவர்சிடி கல்லூரிகளும் உள்ளன. மொத்தம் 2900 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 2010 இடங்கள் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. இக்கல்லூரிகள் Medical Council of India (MCI) வின் ஆளுமைக்கு உட்பட்டவை ஆகும்.

BDS எனப்படும் பல் மருத்துவ படிப்பு Dental Council of India (DCI) ன் ஆளுமைக்குட்பட்டது. இந்த படிப்பானது diagnosis, prevention, treatment of oral diseases, disorders, oral cavity, oral mucosa and of adjacent and related structures and tissues, particularly in the maxillofacial (jaw and face) areas ஆகியன ஆகும். தமிழ் நாட்டில் மொத்தம் 19 கல்லூரிகளிலும், 8 நிகர்நிலை பல்கலைக் கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 2060 இடங்கள் உள்ளன. பின்வரும் ஸ்கிரீன்சாட் மூலம் எந்தக் கல்லூரியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்று தெரிந்துகொள்ளலாம்...
இந்தியாவில் மொத்தம் 183 அரசு கல்லூரிகளில் MBBS பயிற்றுவிக்கப்படுகிறது. 29 அரசு டென்டல் கல்லூரிகள் உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 24,935 அரசு கல்லூரி MBBS இடங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 215 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 27000 MBBS இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அடங்கும்

JIPMER - The Jawaharlal Institute of Post-graduate Medical Education and Research பாண்டிச்சேரியில் உள்ளது. இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த (Institute of National Importance) சுயாட்சியான (அட்டானமஸ்) மத்திய அரசு கல்வி நிறுவனம் ஆகும். இவ்வகை கல்வி நிறுவனங்கள் லேடஸ்ட் உபகரணங்களும் உலக அளவில் தரமான ஆசிரியர்களையும் கொண்டவையாக இருக்கும்.... Jipmerல் மொத்தம் 150 இடங்கள் உள்ளன. அட்மிஷன் கட்டணம் வெறும் ரூ. 4000/- மட்டுமே. ஆண்டுக் கட்டணமாக ரூ. 1400 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இக் கல்லூரியில் சேர தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்...
AFMC - Armed Force Medical College என்பது தரைப் படை, கப்பல் படை, விமானப் படை எனப்படும் முப்படைகளால் நிர்வாகிக்கப்படும் மருத்துவக் கல்லூரி ஆகும். இக் கல்லூரி மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள பூனே மாநகரில் உள்ளது. இக் கல்லூரியில் சேர மாணவர்கள் physics, chemistry, biology பாடங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50%  பெற்றிருக்க வேண்டும். மேலும் பெயிலாகாமல் ஒரே முறையில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு NEET examல் மேல் தரவரிசையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக ஒரு நேர்காணலும் முப்படைகளுக்குத் தேவையான உடல் தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 130 இடங்கள் உள்ளன. இவற்றில் 25 இடங்கள் மாணவியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 10/10 இடங்கள் SC ST பிரிவு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் சேரும் மாணவ மாணவியர் கட்டாயமாக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் பணியாற்ற வேண்டும். மாணவர்களும், பெற்றோரும் 7 வருடங்கள் பணிபுரிய சம்மதித்து ஒரு உத்தஇரவாதப் பத்திரம் அட்மிஷன் நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவு...