Monday, April 16, 2018

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவும்

http://tnmatricschools.com/rte/rteschoollist.aspx

Sunday, April 15, 2018

கோடை விடுமுறையில் இரவு தங்கி வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளை பார்க்கலாம்!

ஆன்லைனில் வண்டலூர்  உயிரியல்  பூங்கா விலங்குகளை பார்க்கலாம்!

வண்டலூர்  உயிரியல்  பூங்காவில்  இரவு  தங்கி  மறுநாள்  பார்க்கக்  கூடிய  வசதியை  பூங்கா  நிர்வாகம்  மேற்கொண்டுள்ளது.

 அத்துடன் ஆன்லைனிலும்  பூங்கா  விலங்குகளை  லைவ்வில்  காணும்  வசதியையும்  உருவாக்கியுள்ளது.

வண்டலூர்  உயிரியல்  பூங்காவில்  உள்ள  அனைத்து  உயிரினங்களை  இணைய  தளத்தில்  பொதுமக்கள்  பார்க்க  முடியும்.

Click Here & View

மருத்துவ படிப்புகள் அறிவோம்

இந்தியாவில் மொத்தம் 7 வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன.... அவை 1. அலோபதி (MBBS, BDS), 
2. ஹோமியோபதி,

Tc பெறுவது இனி மிகவும் easy

வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா?கவலை வேண்டாம்
பல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்பு: மே 16-க்குள் விண்ணப்பிக்கலாம்


ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்புக்கு மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவு சனிக்கிழமை (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலை.யில் பிஹெச்.டி. படிப்பு: மே 7-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நாளை (16ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 18 வயது வரையிலான குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!


சில வருடங்களுக்கு முன்பு, வெறும் 3 மாணவர்கள் பயின்றுவந்ததால் மூடு விழா காணவிருந்த தேனாடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது 50 மாணவர்களுடன் சிறப்பான ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Saturday, April 14, 2018

Students Must Possess These Core Skills For The Future Of Work



Career readiness for future calls for some actions to develop a set of skills.And so we see educators and parents doing all in their power to make sure that kids today are prepared for tomorrow’s challenges. However, how exactly do we define these set of skills is one thing that leaves us in a state of conundrum. Students today are already exposed to the latest technology and on top of that a lot of parents are making sure that their kids are familiar with multiple languages not just to speak with humans but with the machines as well, so we see students learning code.

நோ.,பேனா நோ.,பேப்பர்! கையடக்க கணிணியில் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

இராமநாதபுரம்: பேனா இல்லாமல் பேப்பர் இல்லாமல் (டேப் என அழைக்கப்படும்) கையடக்க கணிணியில் தேர்வு எழுதி பாடம் கற்று அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

தமிழ் புத்தாண்டு பலன்கள் : மிதுனம் சென்னை: விளம்பி வருடம் உத்தராயணப் புண்ய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி,
மீனம் ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது.
மேஷம்
தைரியம் மிக்க மேஷ ராசிக்காரர்களே! சூரியன் மேஷ ராசியில் உச்சத்தில் இருக்கும் வேளையில் புத்தாண்டு பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9ஆம் இடத்தில் சனியோடு சேர்ந்திருக்கிறார். ஆரம்பித்தில் சின்னச் சின்ன கஷ்டங்கள் இருந்தாலும் குரு, சனி பகவானின் அருளால் நன்மையே நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு இந்த ஆண்டு புது வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம் 
அழகுணர்ச்சி மிக்க ரிஷப ராசிக்காரர்களே! புது வருட ஆரம்பத்தில் குருவின் சஞ்சாரத்தால் சில சங்கடங்கள் நேர்ந்தாலும் புரட்டாசிக்குப் பின்னர் தொட்ட காரியம் துலங்கும். பலருக்கும் திருமணம் கைகூடும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் புது வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்து குடி போகும் யோகம் கை கூடி வருது. மாசி மாதத்திற்கு பின்னர் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் வார்த்தையை கவனமாக உபயோகிக்கவும், இல்லாவிட்டால் வம்பாக போய்விடும்.
மிதுனம் 
புத்திசாலித்தனம் மிக்க மிதுன ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் அதிர்ஷ்ட காற்று வீசும். உடல் நலனிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும். திடீர் சொத்துக்கள் கிடைக்கும். கண்டக சனி காலமாகையால் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
கடகம் 
கற்பனை திறன் மிக்க கடக ராசிக்காரர்களே! 4ஆம் வீட்டு குருவால் நன்மைகள் இல்லை என்றாலும் புரட்டாசிக்குப் பின்னர் 5ஆம் வீட்டுக்குக் குரு செல்வதால் திருமணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகளுக்குத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். 6ஆம் இடத்து சனியால் அனைத்தும் கைகூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் வரும். பணவரவு அதிகரிக்கும்.
சிம்மம் 
தன்னம்பிக்கை கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், சுகஸ்தானமாகிய நான்காவது வீட்டில் புரட்டாசிக்குப் பின்னர் அமரப்போகிறார். மனதில் தைரியம் அதிகரிக்கும். நிலம் வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடகை வீட்டில் உள்ள சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உங்கள் குடும்ப விஷயத்தில் பிறரை தலையிட அனுமதிக்காதீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். லட்சுமி நரசிம்மரை வணங்கி வர நல்லதே நடக்கும்.
கன்னி 
அறிவுக்கூர்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே! குரு பகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் முயற்சி ஸ்தானமாகிய மூன்றாமிடத்திற்கு செல்கிறார். புதபகவான் நேரடியாக பார்ப்பதால் தோற்றத்தில் பொலிவும் ஆளுமைத்திறனும் அதிகரிக்கும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 4ஆம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை வாங்க வேண்டாம். மறதியால் பணம், விலை உயர்ந்த ஆபரணத்தை இழக்க நேரிடும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இந்த ஆண்டு கிடைக்கும்.
துலாம் 
எதையும் சரிசமமாக பாக்கும் நியாய குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே! புத்தாண்டு பிறக்கும் போது ஜென்மராசியில் அமர்ந்திருக்கிறார் குரு. சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும், குரு பார்வையால் சில நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தன ஸ்தானத்தில் அமரும் குருவினால் பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். அலுவலகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். கேதுவினால் தாயாரின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டமாக சொத்து சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம் 
அமைதியும், அன்பும் கொண்ட விருச்சிக ராசிக்காரங்களே! உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், புரட்டாசிக்குப் பின்னர் உங்கள் ஜென்ம ராசியில் குரு அமர்ந்தாலும் குரு பார்வை பெரும் இடங்களால் அதிக நன்மை உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தனுசு 
எதையும் நேர்மையாக அணுகும் தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். புரட்டாசிக்குப் பின்னர் உங்களின் ராசிநாதன் குரு பகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சிலர் புது வீட்டிற்கு குடியேறுவார்கள். ஜென்மச் சனியாகத் தொடர்வதால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்காதீர்கள்
மகரம் 
பொறுமை குணம் கொண்ட மகர ராசிக்காரர்களே! உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் சுகஸ்தானத்தில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த விளம்பி ஆண்டு பிறக்கிறது. வருமானம் உயரும். வீட்டிலும் அலுவலகத்திலும் பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். ஏழரை சனி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் விரயச் சனியாகத் தொடர்வதால் தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
கும்பம் 
குடத்தில் இட்ட தங்கம் போல இருக்கும் கும்ப ராசிக்காரர்களே! குரு உங்கள் ராசிக்கு 9வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புரட்டாசிக்கு பின்னர் குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால் யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம். உங்கள் ராசி அதிபதி சனி, ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செல்வ வளம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்து சேரும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் அதிகம் நடக்கும்.
மீனம் 
ஆழ்கடல் அமைதி போல எதையும் மனதில் புதைத்து வைத்துக்கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களே! ராசி நாயகன் குரு புரட்டாசி 18ஆம் தேதி வரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் என்றாலும் குடும்ப ஸ்தானம், 4ஆம் இடம், 12ஆம் இடங்களை பார்ப்பதால் நன்மையே நடக்கும். புரட்டாசி 18ஆம் தேதிக்குப் பின்னர் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வீடு, மனை வாங்குவீர்கள். திருமணம் கை கூடி வரும். செவ்வாய் கேது சேர்க்கையால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்




சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.



குறையும் மாணவர் எண்ணிக்கை கல்வித்துறை ஆய்வில் பகீர் தகவல்

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
 
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன. 
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 
எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

3 MB யில் மொபைல் ஆப் அரசுபள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி சமுக அறிவியல் பாடத்திற்கான் முழுமையான study material

3 MB யில் மொபைல் ஆப் அரசுபள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி சமுக அறிவியல் பாடத்திற்கான் முழுமையான study material 

வீடியோ வடிவில் ஆண்டு விழா அழைப்பிதழ் அசத்தும் அரசுப்பள்ளி காணொலி இணைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிளரியம் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா அழைப்பிதழ் சற்று வித்தியாசமாக வீடியோ வடிவில் வெளியடப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்னும் ஓரிருநாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்னும் ஓரிருநாட்களில் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்க மே 5க்குள் ஆய்வறிக்கையை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Friday, April 13, 2018

3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, 

கோடை விடுமுறை வரும் 21ல் துவக்கம் - ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்

''கோடை விடுமுறை, வரும், ௨௧ல் துவங்குகிறது. மீண்டும் ஜூன்,1ல் பள்ளிகள் திறக்கப்படும்,'' என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது?

தமிழகம் முழுவதும், ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங், அடுத்த மாதம் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது.

DA ARREAR CALCUATOR APP எளிதாக பயன்படுத்தலாம்

 DA arrear calculation software for calculating due drawn particulars

whenever the Da hike announced it is essential for every one to calculate the due drawn particulars

here this excel software was created bt Mr M. Senthilkumar very useful for everyone to calculate and submit the bill. Hope it is useful.

DA arrear calculation software for calculating due drawn particulars

Thursday, April 12, 2018

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியாக விவகாரம் - குற்றவாளி கைது



சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியாக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இமாச்சலப்பிரதேசம் உனாவைச் சேர்ந்த ஆசிரியர் 10-ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியிட்டதை ஒப்புக்கொண்டார். 

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு



தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக உயர்த்தி நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.




தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக நிதித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தற்போது 5 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படியானது, 7 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. 2018 ஜனவரி 1-ம் தேதி முன் தேதியிட்டு இந்த அகவிலைப்படி ஊழியர்களுக்கு வழங்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி போராசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி போராசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முழு விபரம் உள்ளே விண்ணப்பிக்க இறுதி நாள் மே 2 2018
· 
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி போராசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன முழு விபரம் உள்ளே விண்ணப்பிக்க இறுதி நாள் மே 2 2018

Monday, April 9, 2018

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு; அரசு ஊழியருக்கு குண்டாஸ்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில், கைது செய்யப்பட்ட துறை ஊழியர் விநாயகமூர்த்தி என்பவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

உயர்கல்வித் துறை முறைகேடுகளைத் தடுக்க உயர்நிலைக் குழு: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்

உயர்கல்வித் துறையில் முறைகேடுகளைத் தடுக்க அதிகபட்ச அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைப்பது அவசியம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களை பள்ளிகளின் தகவல் பலகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?

உங்கள் மாவட்டத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் (2018-19) எத்தனை இடங்கள் உள்ளன என்பதை காண கீழ்கண்ட Link ஐ Click செய்யவு...